Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

செவ்வாய்க்கிழமை சிரியாவில் யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி 2 ஆம் நாளாக கஷகஸ்தானின் அஸ்தானா நகரில் துருக்கி, ரஷ்யா, கஷகஸ்தான், ஐ.நா மற்றும் ஈரான் தூதுவர்கள் ஒன்று கூடிப் பேசியுள்ளனர். ஆனால் இரு நாட்கள் தொடர்ந்திருக்கும் இப்பேச்சுவார்த்தை மூலம் இந்த யுத்த நிறுத்தத்தை எப்படி நீட்டிப்பது என்பது குறித்து ஊடகங்களுக்கு விளக்க மறுக்கப் பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 6 வருடமாக நீடித்து வரும் சிரிய உள்நாட்டுப் போரில் கிளர்ச்சியாளர்களும் சிரிய அரசும் முதன் முறையாக நேரடியாகப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. ஒரு மாதம் பழமையான குறித்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை எவ்வாறு நிரந்தரமாக்குவது என்பது தொடர்பான பொறிமுறை எது என்பது குறித்து துருக்கி, ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய சக்திகள் விளக்க மறுத்து விட்டன. திங்கட்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இரு தரப்பும் இன்னொரு தரப்பைக் கடுமையாகச் சாடியதால் பேச்சுவார்த்தை ஆத்திரமூட்டுவதாகவும் பயனற்றதாகவும் முடிந்தது. ஆயினும் இவ்விரு தரப்புக்களிலும் எவரும் பேச்சுவார்த்தை முடியும் வரை வெளியேறாது ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இப்பேச்சுவார்த்தையில்  சிரியாவுக்கான ஐ.நா தூதர ஸ்டெஃபான் டிமுஸ்டூராவும் எதிரணியான கிளர்ச்சியாளர்கள் தரப்பில் முகமது அல்லூஷ் என்பவரும் கலந்து கொண்டிருந்தனர். மேலும் கிளர்ச்சிக் குழுவுக்கு ஆலோசனை அளிக்கவென சில சட்ட நிபுணர்களும் அரசியல் அவதானிகளும் கூடப் பங்கேற்றிருந்தனர். அமெரிக்காவில் அண்மையில் தான் புதிய அதிபர் பதவி ஏற்றதால் நேரடியாக யாரும் பங்கேற்கவில்லை எனினும் கஷகஸ்தானுக்கான அமெரிக்க தூதர் ஜார்ஜ் க்ரோல் பார்வையாளராக இருந்தார். சிரியாவில் அமைதி நீடிக்கும் விதத்தில் அஸ்தானா பேச்சுவார்த்தை அமையும் என சிரிய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சிரிய உள்நாட்டுப் போரில் இதுவரை 3 இலட்சம் பேர் வரை கொல்லப் பட்டதுடன் மில்லியன் கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to சிரிய யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தும் ஈரான், ரஷ்யா மற்றும் துருக்கி: எப்படி என விளக்க மறுப்பு

Post a Comment

Followers