Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கேரளாவில் திருநங்கைகளுக்காகவே சிறப்புப் பள்ளி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. ஆண், பெண்களுக்கென எல்லா இடங்களிலும் தனித்தனியாகவும் பொதுவாகவும் பள்ளிகள், கல்லூரிகள், கழிப்பிட வசதி, பேருந்தில் இருக்கைகள், தியேட்டர், துணிக்கடைகள், ஏன் ஏடிஎம்களில் கூட இப்போது தனி வரிசை இருக்க, திருநங்கைகள் எனப்படும் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள் புறந்தள்ளப்படுகிறார்கள்.

தற்போதுதான் அரசாணைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அவர்களுக்கென தனி இட ஒதுக்கீடும் உரிமைகளும் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் கேரளாவில் திருநங்கைகளுக்கு என்று சிறப்புப் பள்ளி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.இது கேரளாவில் திறக்கப்படும் முதல் திருநங்கைகளுக்கான பள்ளி ஆகும்.

எர்ணாகுளம் மாவட்டத்தில் திரிகக்கரா என்னும் பகுதியில் சஹாஜ் இன்டர்நேஷனல் ஸ்கூலில் திருநங்கைகளுக்காகவு சிறப்புப் பிரிவு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. 

இந்த பள்ளியை எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான திருநங்கை கல்கி சுப்பிரமணியம் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
இந்த பள்ளியின் மற்றொரு சிறப்பம்சம், இங்கு ஆசிரியர் பணியிலும் திருநங்கைகளே நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 6 ஆசிரியர்களும் 10 மாணவர்களும் இப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

0 Responses to கேரளாவில் திருநங்கைகளுக்காக தொடங்கப்பட்ட தனிப் பள்ளி!

Post a Comment

Followers