Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐ.நா சபையின் புதிய பொதுச் செயலாளராக போர்த்துக்கல்லின் மாஜி பிரதமர் ஆந்தோனியே கட்டரஸ் புதுவருட தினமான ஜனவரி 1 ஆம் திகதி முறைப்படி பதவியேற்றுக் கொண்டுள்ளார். முன்னதாக ஐ.நா இன் பொதுச் செயலாளராக நீடித்த பான் கீ மூன் இனது பதவிக் காலம் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்ததை அடுத்து அவர் தனது  அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்குப் பிரியாவிடை அளித்து விடைபெற்றார்.

ஐ,நா சபையின் 8 ஆவது பொதுச் செயலாளராக கடந்த 2007 ஆம் ஆண்டு தேர்வு செய்யப் பட்ட பான் கீ மூன் கடந்த 9 வருடங்களாக சேவையாற்றி இருந்தார். இந்நிலையில் புதிய பொதுச் செயலாளரான ஆந்தோனியோ கட்டரஸ் 2021 டிசம்பர் 31 ஆம் திகதி வரை அப்பதவியில் நீடிப்பார் என்பது  குறிப்பிடத்தக்கது. பதவியேற்ற பின்னர் கட்டரஸ் வெளியிட்ட அறிக்கையில் உலக மக்களுக்கு அமைதியை நிலைநாட்டுவதே தனது புத்தாண்டு உறுதி மொழி என்றும் அமைதிக்கு முக்கியத்துவம் அளித்து நாடுகளுக்கு இடையேயான பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கத்தில் எனது பணியைத் தொடர்வேன் எனவும் தெரிவித்திருந்தார்.

ஜனவரி முதலாம் திகதி ஐ.நா பொதுச் செயலாளர் மட்டுமன்றி 5  மேலதிக பாதுகாப்புச் சபை உறுப்பினர்களும் புதிதாகப் பதவியேற்றுக் கொண்டனர். கொரிய நாட்டுத் தலைவரான பான் கீ மூன் தலைமையில் ஒரு சர்வதேச அமைப்பான ஐ.நா உலக அமைதியை நிலைநாட்டுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடையத் தவறி விட்டதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முன்னால் போர்த்துக்கல் பிரதமரும் ஐ.நா அகதிகள் பிரிவின் உயர் அதிகாரியும் ஆன கட்டரஸ் ஐ.நா சபைக்கு புதிய வாய்ப்புக்களை வழங்குவார் என எதிர்பார்க்கப் படுகின்றது.

2017 ஆம் ஆண்டு 6 வருடங்களாக நீடிக்கும் சிரிய யுத்தம் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பாரிய அகதிகள் பிரச்சினை என்பனவும் கால நிலை மாற்றம் தொடர்பான உலக நாடுகளின் போராட்டமும் அதை நிவர்த்தி செய்ய ஏற்படுத்தப் பட்டுள்ள COP21, COP22, மற்றும் COP23 ஆகிய ஒப்பந்தங்களை நடைமுறைப் படுத்துவதும் ஐ.நா சபைக்கு மிகப் பெரிய சவால்களாக அமைந்துள்ளன.

0 Responses to ஐ.நா இன் புதிய பொதுச் செயலாளராக ஆந்தோனியோ கட்டரஸ் பதவியேற்பு! : பான் கீ மூன் விடைபெற்றார்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.

அதிகமாக வாசிக்கபட்டவை...