Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காமராஜர் உயிரோடு இருந்திருந்தால் மத்திய அரசின் நடவடிக்கையை பாராட்டி இருப்பார் என்று பிரதமர் நரேந்திர மோடி தமது உரையில் கூறினார்.

பிரதமர் தனது உரையில் காமராஜர், ஜெயபிரகாஷ் நாராயணனுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். காமராஜர் உயிரோடு இருந்திருந்தால் மத்திய அரசின் நடவடிக்கையை பாராட்டி இருப்பார் என மோடி தெரிவித்துள்ளார்.

இறைவன் படைப்பில் மனிதன் நல்லவன் என்றாலும் தீமையின் பிடியில்  சிக்குகிறான்.வங்கி சேவை விரைவில் சகஜ நிலைக்கு திரும்பிவிடும். ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்பட்டது நாட்டை தூய்மைபடுத்தும் பணியாகும்.கறுப்பு பணத்தை ஒழுப்பதற்கான போரில் இந்திய மக்கள் தியாக மனப்பான்மையை வெளிபடுத்தியுள்ளனர்.

ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற துடிப்பு நாட்டு மக்களிடம் உள்ளது பணமதிப்பிழப்பு விவகாரத்தால் ஏற்பட்ட கஷ்டங்களை நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். புதுவருடத்தில் வங்கிகள் இயல்பு நிலைக்கு திரும்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் தேசப்பற்றில் தங்களுக்கு நிகர் யாருமில்லை என்பதை மக்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்கள். நேர்மையானவர்களை அரசு ஊக்குவிக்கும்; நேர்மையற்றவர்களை திருத்தும்.நேர்மையை காப்பாற்ற வேண்டும் என்ற மரபு காப்பாற்றப்பட்டுள்ளது.

ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது. கறுப்புப் பணம் ஒரு சதவிகிதம் கூட இருக்க கூடாது. அரசின் நடவடிக்கையால் பயங்கரவாத நடவடிக்கைகள் குறைந்துள்ளன.வங்கி
ஊழியர்களுக்கு பிரதமர் பாராட்டு; ஊழலுக்கு துணைப் போன அதிகாரிகளை விட்டுவிட மாட்டோம்.

ஏழைகள் வீடுகட்ட புதிய அறிவிப்பினை அறிவித்தார் பிரதமர் மோடி. 12 லட்சம் வரை வாங்கும் கடனுக்கு 3% மட்டுமே வட்டி,.9 லட்சம் வரை வாங்கும் கடனுக்கு 4% மட்டுமே வட்டி. வீடுகளை புணரமைக்க ₹2 லட்சம் வரை பெறப்படும் கடனுக்கு வட்டி குறைவு.விவசாயிகளுக்கு கடன் வழங்கிட ₹ 20000 கோடி ஒதுக்கீடு. விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கிசான் கார்டுகள் ரூபே கார்டாக மாற்றித் தரப்படும்.நாடு முழவதும் 650 மாவட்டங்களில் உள்ள கர்ப்பிணிகளுக்கு தலா ₹6000 வங்கியில் செலுத்தப்படும்.

கூட்டுறவு வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும். மூத்த குடிமக்கள் ₹ 7.5 லட்சம் வங்கிகளில் 10 ஆண்டுகள் டெபாசிட் வைத்தால் 8% வட்டி வழங்கப்படும். சிறு,குறு வணிகர்களுக்கு உத்தரவாதமின்றி வழங்கப்பட்ட 1கோடி வரையிலான கடன் தொகை ₹ 2 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.

0 Responses to காமராஜர் இருந்திருந்தால் மத்திய அரசின் நடவடிக்கையை பாராட்டி இருப்பார்: பிரதமர் உரை!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.

அதிகமாக வாசிக்கபட்டவை...