Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, ரவிராஜின் மனைவியால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட மேன்முறையீட்டு மனுவை, மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த மனு மீதான விசாரணை மார்ச் மாதம் 03ஆம் திகதி நடைபெறும்.

நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையில் சந்தேக நபர்கள் ஜுரிகள் சபை முன்னிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்தத் தீர்ப்பிற்கு எதிராக ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் அண்மையில் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

மனுதாரரோ அல்லது அவர் சார்பாக எந்தவொரு சட்டத்தரணியோ நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தால் ரவிராஜின் மனைவியின் மனு கடந்த 19ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே இந்த மனுவை மீண்டும் மீளாய்வு செய்யுமாறு ரவிராஜின் மனைவியால் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நேற்று செவ்வாய்க்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

கடந்த 19ஆம் திகதி மனுவை விசாரணைக்கு எடுக்குமாறு தான் கேட்டிருக்கவில்லை என்றும் அன்றைய தினம் மனுதாரருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதை தான் அறிந்திருக்கவில்லையென்றும் எனவே நீதிமன்றத்தில் தம்மால் ஆஜராக முடியாமல் போய்விட்டதாகவும் குறிப்பிட்டே ரவிராஜின் மனைவி மீளாய்வுக்கான கோரிக்கையை விடுத்துள்ளார்.

0 Responses to ரவிராஜ் படுகொலை வழக்கு; நிராகரிக்கப்பட்ட மேன்முறையீட்டு மனு மீண்டும் விசாரணைக்கு!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...