Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அந்தோனியோ குட்டேர்ஸ் ஐ.நாவின் ஒன்பதாவது பொதுச் செயலாளராக, 2017 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் பதவியேற்றுக் கொண்டுள்ளார். போர்த்துக்கலின் முன்னாள் அதிபரான இவர், ஐ.நாவின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராக கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்தவர்.

இதனால் அகதிகள் தொடர்பிலான இவரது அக்கறைக்கு பலம் சேர்க்கும் வகையில் இவருடைய புதிய பதவி செயற்பட வாய்ப்பிருக்கிறது.

அகதிகள் மீதான கரிசணையும் இன்னமும் அதிகரிக்கலாம்!

இவர் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராக பதவி வகித்த காலத்தில்,  ஐரோப்பாவை நோக்கிய அகதிகளின் வருகை, சிரிய யுத்தத்தினால் இடம்பெயரத் தொடங்கிய அகதிகள் ஆகியோரது சிக்கல்களையும்,  உக்ரேய்ன் உள்நாட்டு கிளர்ச்சி, இஸ்ரேல் - பாலஸ்தீன யுத்தம், சுனாமி போன்ற இயற்கை அனர்த்த அழிவுகளையும் சந்திக்க நேர்ந்தது. இவர் அமைதியானவர் அல்ல. வெளிப்படையாக பேசும் சக்திவாய்ந்த பேச்சாற்றல் கொண்ட தலைவர். இவரை போன்ற ஒருவரே ஐ.நாவுக்கு தற்போது தேவை என்கிறார் Better Workd Campaign எனும் அமைப்பின் தலைவர் பீட்டெர் யோ.

பெண்களுக்கு ஐ.நாவில் அதிக பதவிகள்!

ஐ.நாவில் பெண்களுக்கு அதிக உயர் பதவிகள் வழங்கப்பட வேண்டும் எனும் கோட்பாடு உடையவர் அந்தோனியோ. இவருடைய தனிப்பட்ட செயலாளராக நைஜீரியாவின் சுற்றுத் துறை அமைச்சர் அமினா மொஹ்மட் எனும் பெண்மணியும், தலைமைச் செயலாளராக பிரேசிலின் மரியா லுயிஸா ரிபேரியயோ எனும் பெண்மணியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டொனால்டு டிரம்பை சந்திக்கும் ஆர்வம்!

அமெரிக்க புதிய ஜனாதிபதி டொனால்டு டிரம்பை சந்திக்க ஆர்வமாகவுள்ள அந்தோனியோ இது குறித்து வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார். ஐ.நா  அமைப்பானது தனது சிறப்பியல்புகளை இழந்துவிட்டதாக அண்மையில் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அந்தொனியோ இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

வரும் முன் காப்போம் கொள்கை

இரு நாடுகளுக்குள் பிளவு வந்த பின்னர் அதை எப்படி சமாளிப்பது எனப் பார்க்காமல் வரும் முன் காப்போம் எனும் கொள்கை உடையவர் அந்தோனியோ. இதனால் அமைதிக்காக இவர் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தனியார் வர்த்தக முதலீட்டாளர்களையும், அரசியல் தலைமைகளையும் ஒரே நேர்கோட்டில் கொண்டு செல்லக் கூடிய வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Responses to ஐ.நாவின் புதிய பொதுச் செயலாளராக பதவியேற்றுள்ள அந்தோனியோ குட்டேர்ஸ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...