தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டங்கள் மேலோங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் மெரினா கடற்கரையில் நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் பிரபல்யமாக பார்க்கப்படுகின்றது.
மெரினா கடற்கரையோரத்தில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பெண்ணொருவர் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படத்துடன் போராட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் இவரின் உருவப்படத்துடன் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஏன் கலந்து கொள்கிறீர்கள் என கேள்வியெழுப்பியுள்ளார்.
இதற்கு குறித்தப் பெண் ”இவர் இல்லாமல் தமிழருக்கு உணர்வு எப்படி வரும்” என பதிலளித்துள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய பெண் பிரபாகரனின் உருவப்படத்தை தாங்கியவாறு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக அதிகம் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பிரபாகரனின் புகைப்படம்!