Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுக் கொண்டுள்ளார். அமெரிக்க சரித்திரத்தில் அதிக வயதில் அதாவது 70 வயதில் பதவியேற்றுக் கொண்ட முதல் அதிபர் டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.

வாஷிங்டனில் அமைந்துள்ள அமெரிக்க நாடாளுமன்றத்தில் அமெரிக்கத் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் டிரம்புக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருக்கு முன்பு மைக் பென்ஸ் துணை அதிபராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இப்பதவியேற்பு விழாவில் முன்னால் அதிபர் ஒபாமா அவரின் குடும்பத்தினர், ஹிலாரி கிளிங்டன் பில் கிளிங்டன் தம்பதிகள், முன்னால் அதிபர் ஜோர்ஜ் w புஷ் அவரின் குடும்பத்தினர் மற்றும் முன்னால் அதிபர் ஜிம்மி கார்ட்டெர் உட்பட 8 இலட்சம் மக்கள் பங்குபற்றிக் கொண்டனர்.

பதவியேற்ற பின் டிரம்ப் ஆற்றிய முதல் உரையில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை என்பதை நேரடியாகக் குறிப்பிட்டு அழுத்தமாகப் பேசியுள்ளார். அந்த உரையின் சுருக்கம் வருமாறு:

அமெரிக்க மக்களான உங்களுக்கே முன்னுரிமை! உங்களுக்காக நான் ஓய்வின்றி உழைப்பேன். அமெரிக்காவின் நலனே எனது ஒரே நோக்கம். நீங்கள் புறக்கணிக்கப் பட மாட்டீர்கள்! இது உங்களுக்கான தருணம். அமெரிக்க மக்களாகிய உங்களின் அதிகாரம் பறிக்கப் பட்டுள்ளது. அதை நான் மீட்டுத் தருவேன். வர்த்தகம், வரி, குடியுரிமை, வெளிநாட்டு விவகாரம் ஆகியவை அமெரிக்கத் தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினரது நலன்களுக்காகவே அமையும்.

அமெரிக்க அதிபராகப் பதவியேற்றதும் முதன் முறையாக டொனால்ட் டிரம்ப் ஒபாமாவின் சுகாதாரத் திட்டத்துக்கு எதிராகக் கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to டொனால்ட் டிரம்பின் பதவியேற்பும் முதலாவது உரை சுருக்கமும்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...