Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜல்லிக்கட்டு மிருகவதை, அதனை ஏற்ப முடியாது என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தன்னெழுச்சி போராட்டத்தை வரவேற்கிறேன். ஆனால், ஜல்லிக்கட்டு மிருகவதை. எனவே ஜல்லிக்கட்டுக்கு எதிரானவன் நான். தமிழர் பண்பாடு எனக் கருதப்படும் உடன்கட்டை ஏறும் வழக்கம், சிறுவயது திருமணம் என்பன இப்போது நடைமுறையில் இல்லை. இதே போன்று மிருகவதையான ஜல்லிக்கட்டையும் நாம் கைவிட வேண்டும். இதேவேளை வடக்கில் நடைபெறும் மாட்டு வண்டி சவாரியும் மிருகவதை அதனையும் தடை செய்ய வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to ஜல்லிக்கட்டு மிருகவதை, அதனை ஏற்க முடியாது: டக்ளஸ்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.