Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்கா மீதான சைபர் தாக்குதல் மற்றும் அதிபர் தேர்தலில் செல்வாக்கு செலுத்தியது போன்ற செயல்களுக்காக டிசம்பரில் ரஷ்யா மீது ஒபாமா தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் பொருளாதாரத் தடைகளை அதிகரித்திருந்தது.

இந்நிலையில் ரஷ்யா போதிய ஒத்துழைப்பு நல்கும் பட்சத்தில் அதன் மீதான பொருளாதாரத் தடைகளைக் கடந்து நல்லுறவை வலுப்படுத்துவேன் என வோல்ட் ஸ்டிரீட் ஜோர்னல் பத்திரிகைக்கு டொனால்ட் டிரம்ப் பேட்டியளித்துள்ளார்.

மேலும் ஜனவரி 20 ஆம் திகதி தான் பதவியேற்ற பின்னர் ரஷ்ய அதிபர் புட்டினை சந்திப்பதற்கும் தான் தயாராகி வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். மறுபுறம் சீனா தனது நாணய மதிப்பீடு மற்றும் வர்த்தகக் கொள்கைகளை மாற்றி அமைக்காத வரை தான் அந்நாட்டின் ஒரே சீனக் கொள்கைக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

முக்கியமாக ரஷ்யா தீவிரவாதத்துக்கு எதிரான போரில் மிக உதவிகரமானதாகவும் வாஷிங்டனுக்கு தேவைப்படும் முக்கியமான ஏனைய இலக்குகளை அடைவதற்கு தடங்கல் இல்லாது செயற்படும் போது மாத்திரமே அதன் மீது ஒபாமா தலைமையில் விதிக்கப் பட்ட தடைகளைக் கடந்து தான் செயற்பட எத்தனிப்பேன் என டிரம்ப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அண்மையில் அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு தாய்வான் நாட்டு அதிபர் வாழ்த்து தெரிவிக்க எடுத்த தொலைபேசி அழைப்பை அவர் ஏற்றுக் கொண்டது சீனாவின் கோபத்தை அதிகரித்து இருந்தது. ஏனெனில் சீனா தனது ஒரே சீனக் கொள்கை அடிப்படையில் தாய்வானை தனது நாட்டின் ஒரு பகுதியாகவே பிரகடனப் படுத்தி வந்துள்ளது. இந்நிலையில் டிரம்ப் தாய்வானின் விடுதலையை ஆதரிக்கின்றாரா என்றும் மற்றும் இதன் மூலம் ஒரே சீனக் கொள்கையை எதிர்க்கின்றாரா என்றும் கருதிய சீனா முன்னதாக ஒரே சீனக் கொள்கையை ஆதரித்து வந்த அமெரிக்காவின் நிலைப்பாடு பற்றி தற்போது ஐயம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ரஷ்யா ஒத்துழைப்பு நல்கும் பட்சத்தில் அதன் மீதான தடைகளைக் கடந்து செயற்படுவேன்! : டொனால்ட் டிரம்ப்

Post a Comment

Followers