Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழங்கில் ஜூரிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பிற்கு எதிரான மேன்முறையீட்டு மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இன்று வியாழக்கிழமை நிராகரிக்கப்பட்டுள்ளது.

நடராஜா ரவிராஜின் மனைவியினால் இந்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த கொலை குறித்த வழக்கின் தொடர்புபட்டதாக குற்றஞ்சுமத்தி வழக்குத் தொடரப்பட்டிருந்த ஐந்து சந்தேக நபர்களையும் ஜூரிகளின் பரிந்துரைக்கு அமைய கடந்த 24ஆம் திகதி உயர்நீதிமன்றம் குற்றமற்றவர்கள் எனத் தீர்ப்பளித்து விடுதலை செய்திருந்தது.

இந்த வழக்குத் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்த ரவிராஜின் மனைவி, ஜூரிகள் நியமிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பியும் தீர்ப்பினை இரத்து செய்யுமாறும் மேன்முறையீட்டு மனுவில் கோரியிருந்தார்.

மனுதாரர் அல்லது மனுதாரரை பிரதிநிதித்துவம் செய்ய எவரும் நீதிமன்றில் பிரசன்னமாகியிருக்கவில்லை என்ற அடிப்படையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த மனுவை நிராகரித்துள்ளது. வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போதே ஜூரிகள் நியமனம் குறித்து எதிர்ப்பை வெளியிட்டிருக்கலாம் என பிரதிவாதிகளின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to ரவிராஜ் படுகொலை வழக்குத் தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...