Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிரிய அரசுக்கும் எதிரணியினருக்கும் இடையே உறுதியான யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதால் சிரியாவில் முகாமிட்டுள்ள தனது இராணுவப் படையினரை படிப்படியாக குறைத்து வருவதாக வெள்ளிக்கிழமை ரஷ்யா அறிவித்துள்ளது.

டிசம்பர் இறுதியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் சிரியாவில் யுத்த நிறுத்தத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்ததுடன் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்துக்கு சாதகமாக யுத்தத்தின் போக்கைத் திருப்பிய ரஷ்யாவின் இராணுவத் தலையீட்டை மெல்ல மெல்ல குறைக்கப் போவதாக இன்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரஷ்ய இராணுவத் தலைமை அதிகாரி ஜெனெரல் வலேரி ஜெராசிமோ தெரிவிக்கையில் இராணுவம் மீளத் திரும்பும் நடவடிக்கை வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பித்திருப்பதாகவும் முக்கியமாக ரஷ்ய கடற்படை மற்றும் விமானம் தாங்கிக் கப்பலான அட்மிரல் குஷ்னெட்சோவ் ஆகியவை கிழக்கு மத்திய தரைக் கடலில் இருந்து மீளப் பெறப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் ரஷ்ய ஆயுதம் தாங்கிய படைகளின் சுப்ரீம் கமாண்டரான அதிபர் விளாடிமிர் புட்டினின் உத்தரவுப் படியே சிரியாவில் இருந்து தமது படைகளை மீளப் பெறும் நடவடிக்கையை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு ஆரம்பித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நவம்பரில் சிரிய கடற்கரைப் பகுதியில் இருந்து கிளர்ச்சிப் படை மீது பாரிய வான் தாக்குதல்களை ரஷ்யா மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதேவேளை சிரிய இராணுவத் தலைவர் லெப்டினண்ட் ஜெனெரல் அலி அப்துல்லா அயோப் ரஷ்ய உள்நாட்டுத் தொலைக்காட்சிக்கு அளித்த செய்தியில் சிரியாவில் தீவிரவாதத்துக்கு எதிரான போரில் வெற்றிபெற ரஷ்யாவின் இராணுவக் கூட்டுறவு இன்றியமையாததாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் மார்ச் மாதமே சிரியாவில் இருந்து இராணுவத்தைக் குறைப்பதாக ரஷ்யா அறிவித்திருந்த போதும் தனது இராணுவ ஆதரவை அதிகரித்தே அது வந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to சிரியாவில் தமது படைகளைக் குறைக்கும் பணியை ஆரம்பித்திருப்பதாக ரஷ்யா அறிவிப்பு

Post a Comment

Followers