Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நல்லாட்சி அரசாங்கமானது தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

அவ்வாறானதொரு நிலையில், நல்லாட்சி அரசாங்கத்துக்கு வழங்கிவரும் ஆதரவினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீக்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சமகால அரசியல் தொடர்பில் அனந்தி சசிதரனிடம் ஊடகமொன்று கேள்வியெழுப்பிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ் மக்கள், தங்களுடைய பிரச்சினைகள் குறித்துப் பேசுவார்கள். தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்குகளை அளித்து, அவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மைத்திரி- ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம், ஏதோ ஒரு வகையில், தமிழர்களுக்கு நல்லது செய்யுமென்ற எதிர்பார்ப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவை வழங்கி வருகின்றது. இந்நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணி விடுவிப்பு உள்ளிட்ட எமது பிரச்சினைகள், தீர்க்கப்படாமல் இருப்பதுடன், நாம் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருப்பதை உணர்ந்துள்ளோம்”என்றுள்ளார்.

0 Responses to நல்லாட்சி அரசாங்கத்தினால் தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படுகின்றனர்: அனந்தி சசிதரன்

Post a Comment

Followers