மாணவர்கள். இளைஞர்கள் மீது காவல்துறை தடியடி தாக்குதல் நடத்தியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், நிரந்தரமாக தடையை நீக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டுமென வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நீடித்து வருகிறது. இதற்கிடையே அமைதியாகப் போராடும் மாணவர்கள்/இளைஞர்களை காவல்துறையை பயன்படுத்தி தமிழக அரசு போராட்ட இடத்திலிருந்து அகற்றுவதற்கு முயற்சிக்கிறது.
சென்னை மெரீனா கடற்கரை, மதுரை அலங்காநல்லூர் உள்ளிட்டு அனைத்து இடங்களிலும் தடியடி நடத்தி காவல்துறை போராடும் இளைஞர்களை அராஜகமாக கலைக்கிறது. இளம்பெண்கள் மீதும் காவல்துறை தடிகொண்டு தாக்குகிறது. பல இடஙகளில் மாணவர்கள், இளைஞர்கள் தடியடியால் மயங்கி விழுந்துள்ளனர். இந்த அராஜகத்தை இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி மாநில செயற்குழு
வன்மையாக கண்டிக்கிறது.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க நிரந்தர சட்டம் கோரி போராடும் மாணவர்கள், இளைஞர்களோடு நம்பிக்கையளிக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு சுமுக தீர்வை ஏற்படுத்த வேண்டுமெனவும், காவல்துறையின் தடியடி வன்முறை நடவடிக்கைகளை கைவிட வேண்டுமெனவும், நிரந்தர சட்டம் இயற்ற வேண்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

0 Responses to மாணவர்கள், இளைஞர்கள் மீது காவல்துறை தடியடி தாக்குதல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்