Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்கிற எண்ணத்தினைத் தரவில்லை என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ருவிட்டரில் தன்னை பின்தொடர்பவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மஹிந்த நேற்று புதன்கிழமை பதில் வழங்கினார். அதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து கேள்விகளுக்கு பதிலளிக்கையில்,

“மீண்டும் ஒரு தடவை நாட்டின் தலைவராவதற்கான வாய்ப்பு கிடைத்தால் வித்தியாசமாக எதாவது செய்வீர்களா?”, என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், யார் நாட்டின் தலைவராக இருந்தாலும் நாட்டின் தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு நன்மை பயக்கக்கூடிய வகையிலான செயற்பாடுகளை முன்னெ க்க வேண்டுமென வலியுறுத்தினார்.

இந்த நாட்டில் அபிவிருத்தி திட்டங்கள் நடைபெறுவதாக ஜனாதிபதி மைத்தி்ரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளதாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கிய அவர், இந்த அராசங்கம் பெற்றுக்கொண்டுள்ள கடன் தொகைக்கேற்ப அபிவிருத்தி பணிகள் நடைபெறவில்லை என்பது சாதாரண அறிவுடைய எவருக்கும் தெரியுமெனக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய வளங்கள் விற்பனை செய்யப்படுவதை எவ்வாறு தடுக்கலாம் என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அது இந்த காட்டிக்கொடுப்புகளை தடுப்பது மக்களின் கைகளிலேயே இருப்பதாகவும் அவர்களிடமே அந்த பலம் காணப்படுவதாகவும் குறி ப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றில் இடம்பெறும் பொது வாக்கெடுப்புகளின்போது பங்கேற்காமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கிய அவர், அந்த குறிப்பிட்ட விடயங்களுக்கும் தமக்குமான உறவு தொடர்பில் தான் தெளிபுபடுத்தியுள்ளதாகவும் எனினும் பெரும்பா லான சந்தர்ப்பங்களில் தான் சமூகமளித்திருந்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வாக 13 பிளஸை அமுல்படுத்தப்போவதாக கூறியிருந்தீர்களே என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அனைத்து சமூகங்களின் நலன்களும் பேணப்படுகின்ற அரசியல் தீர்வு தொடர்பில் தான் தொடர்ந்தும் உறுதியாக உள்ளதாக வலியுறுத்தியுள்ளார்.

அம்பாந்தோட்டையில் விவசாய நிலங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதை எதிர்க்கும் நீங்கள் சம்பூரில் அனல்மின் நிலையத்தை அமைப்பதற்கு வெளிநாட்டிற்கு எவ்வாறு அனுமதி வழங்கினீர்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், சம்பூர் இலங்கையின் திட்டம் எனவும் எனினும் அதனை நிர்மாணிக்கும் பணிகளையே இந்தியா முன்னெடுத்ததாகவும் சுட்டிக்காட்டிய அவர், எந்தவொரு காணியும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படவில்லை எனவும் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நியமித்தால் நீங்கள் ஆதரவு வழங்குவீர்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், கட்சி எடுக்கும் தீர்மானங்களுக்கு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தனது தீர்மானத்தை அறிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நீங்கள் தேர்தலில் தோல்வியடைந்தீர்கள், எனினும் மீண்டும் உங்களால் வெற்றிபெற முடியுமா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கிய அவர், மக்களின் தீர்ப்புகளை தலைவர்கள் பின்பற்ற வேண்டுமென கூறியுள்ளார்.

0 Responses to நல்லாட்சி அரசாங்கத்தினால் தேசியப் பிரச்சினைக்கு தீர்வைக் காண முடியாது: மஹிந்த

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...