Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கோவையில் தமிழக அரசால் தோடங்கப்பட்ட ரேக்ளா பந்தயம் மாணவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. கொடிசியா வளாகத்தில் இப் பந்தயத்தினை அமைச்சர் வேலுமணி ஆரம்பித்து வைத்த சில நிமிடங்களிலேயே அவ்விடத்தில் மாணவர் போராட்டக்குழுவைச் சேர்ந்தவர்கள் சுற்றி வளைத்துக் கொண்டனர்.

இஙகே சமரசம் பேசிய காவல்துறை ஆணையரின் பேச்சுக்களையும் நிராகரித்த போராட்டக்காரர்கள், அமைச்ரையும் முற்றுகையிட்டனர். போராட்டக்காரர்களிடத்தியிலிருந்து அமைச்சரைக் காவல்துறையினர் பாதுகாப்பாக வெளியேற்றி அனுப்பிவைத்துள்ள நிலையில் கொடிசியா வளாகத்திலும் தற்போது போராட்டக்காரர்கள் தங்களது போராட்டத்தினை தொடர்ந்து வருகின்றார்கள்.

இது இவ்வாற்றிருக்க இன்று  அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டினை ஆரம்பித்து வைக்க வந்த தமிழக முதல்வர்  மதுரை வந்திருந்தார். ஆயினும் அலங்கா நல்லூர் வாடிவாசல் பகுதியினை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் நிரந்தரச் சட்டமே தேவையென்ற கோரிக்கையினை முன்வைத்து போரிட்டதனால் போட்டிகள் நடத்த முடியவில்லை. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் கொண்டுவரப்பட்டுள்ள அவசரச் சட்டமே நிரந்தரச்சட்டம்தான். அதனை அமைச்சரசை செயலமர்வின்போது உறுதி செய்யப்படும் எனவும், அதன் மீதான தடையினை யார் மேற்கொண்டாலும் தமிழக அரசு அதனை எதிர்த்துப் போராடும் எனவும் குறிப்பிட்டார். இவற்றைப் புரிந்துகொண்டு மக்கள் விரும்பும் நாளில் அலங்கா நல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

0 Responses to கோவையில் அமைச்சர் முற்றுகை : மதுரையில் முதல்வர் பேட்டி

Post a Comment

Followers