Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சமஷ்டிக்கு இடமில்லை: ஜனாதிபதி

பதிந்தவர்: தம்பியன் 16 January 2017

மீண்டுமொரு யுத்தம் ஏற்படுவதைத் தவிர்த்து தேசிய ஐக்கியத்தை உறுதிப்படுத்தி நியாயமான ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பி உலகின் அங்கீகாரத்தைப் பெற்ற உன்னத நாடாக இலங்கை மிளிரச்செய்வதே தன்னுடைய இலக்கென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மாறாக, நாட்டை சமஷ்டி முறைக்கு இட்டுச்செல்லவோ, அல்லது நாட்டைத் துண்டாடவோ தான் முயற்சிக்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலி லபுதுவ சிறிதம்ம கல்லூரியில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை ‘உத்தியோகபூர்வ பணி’ ஜனாதிபதி மக்கள் சேவையின் காலி மாவட்ட நிறைவு விழாவைத் தொடர்ந்து இடம்பெற்ற சமய நல்லிணக்கத்தை உறுதிசெய்யும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இந்த நாட்டு மக்களினால் தாம் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் நாட்டின் முன்னேற்றப் பயணத்திற்கு பல்வேறு தடைகள் காணப்பட்டதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தற்போதைய அரசாங்கம் நாட்டைப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து அந்த பிரச்சினைகளை தீர்த்து அனைத்து நாடுகளுடனும் நட்புறவைக் கட்டியெழுப்பி அபிவிருத்தி மற்றும் பொருளாதார நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்து செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு முதலீடுகளை நாட்டுக்குக் கொண்டுவரும் போது நாட்டை விலைபேசுவதாக சிலர் கோசம் எழுப்புகின்றனர். பல்லாண்டு கால வரலாற்றுப் புகழ்வாய்ந்த எமது தாய்நாட்டின் பெறுமதியை நன்றாகப் புரிந்துகொண்டு நாட்டைப் பாதுகாப்பதற்கும் வளப்படுத்துவதற்கும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருவதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to சமஷ்டிக்கு இடமில்லை: ஜனாதிபதி

Post a Comment

Followers