Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வவுனியா ஓமந்தைச் சோதனைச்சாவடி அமைந்திருந்த பகுதியிலிருந்து நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இராணுவம் வெறியேறியுள்ளது.

குறித்த காணிகள் தனியாருக்கு சொந்தமானது. அந்தப் பகுதியிலிருந்து இராணுவத்தினர் தைப்பொங்கலுக்கு முன்னர் வெளியேறுவார்கள் என்று ஏற்கனவே அறிவித்திருந்த நிலையிலேயே இராணுவம் வெளியேறியுள்ளது.

கடந்த யுத்த காலத்தில் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து வடக்கில் இருந்து தெற்கிற்கும், தெற்கில் இருந்து வடக்கிற்குமான நுழைவாயிலாகவும் மக்களையும் பொருட்களையும் சோதனையிடும் பிரதான சோதனைச்சாவடியாகவும் இருந்த இந்த ஓமந்தைப் பகுதி 21 பேருக்கு சொந்தமான 24 ஏக்கர் காணியாக காணப்பட்டிருந்தது.

இந்நிலையில், யுத்தம் நிறைவடைந்தன் பின்னர் இக்காணின் உரிமையாளர்கள் தொடச்சியாக தமது காணிகளை மீள் ஒப்படைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது இராணுவம் அப்பகுதியில் இருந்து வெளியேறியுள்ளது.

0 Responses to ஓமந்தைச் சோதனைச்சாவடிக் காணிகளிலிருந்து இராணுவம் வெளியேற்றம்!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...