Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதிப்போரின் போது இடம்பெற்ற கொடுமைகள் தொடர்பில் நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாலோசணைச் செயலணியிடம் சாட்சியமளித்தவர்கள், கருத்துக்களை வெளியிட்டவர்கள் விடயத்தில் இராணுவமோ, பொலிஸாரோ எந்தவிதத் தலையீட்டினையும் செய்ய முடியாது என்று பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாலோசணைச் செயலணி முன்பாக சாட்சியமளித்தவர்கள், கருத்துக்களைப் பகிர்ந்தவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று செயலணியின் தலைவர் மனோரி முத்தெட்டுவேகம கோரியிருந்தார்.

இதுதொடர்பாக, அவர் கடந்தவாரம் பாதுகாப்புச் செயலரை சந்தித்து, சாட்சியமளித்தவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவது முக்கியம் என்றும் வலியுறுத்தினார். இராணுவம் மற்றும் முன்னாள் போராளிகளின் நடவடிக்கைகளில் இருந்து சாட்சியங்களைச் சமர்ப்பித்தோரின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.

இதுகுறித்துக் கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்புச் செயலாளர், “நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாலோசணைச் செயலணி யிடம் சாட்சியங்களை அளித்தவர்களின் விடயத்தில் இராணுவமோ, பொலிஸாரோ தலையீடு செய்யாது. தமது கவலைகளை எடுத்துக் கூறியவர்களின் விடயங்களில் படையினர் தலையீடு செய்வார்கள் என்ற கருத்து அடிப்படையற்றது.” என்றுள்ளார்.

0 Responses to நல்லிணக்கச் செயலணியிடம் சாட்சியமளித்தவர்கள் விடயத்தில் இராணுவம் தலையிடாது: கருணாசேன ஹெட்டியாராச்சி

Post a Comment

Followers