Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

22 ஆண்டுகள் காம்பிய அதிபராக ஆட்சி புரிந்து கடந்த நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் தோல்வியுற்ற போதும் பதவி விலக மறுத்து வந்த காம்பியாவின் முன்னால் அதிபரான யாஹியா ஜம்மே தற்போது நாட்டை விட்டு வெளியேறி கினியா சென்றிருப்பதாகத் தெரிய வருகின்றது.

1965 இல் காம்பியா இங்கிலாந்திடம் இருந்து சுதந்திரம் பெற்றது. இதை அடுத்து 3 தசாப்தங்களாக சர்வாதிகார ஆட்சி இடம்பெற்றது. 1994 ஆம் ஆண்டு இராணுவப் புரட்சி மூலம் யாஹியா ஜம்மே அதிபராகப் பதவியேற்றார். ஆயினும் அண்மைக் காலமாக இவரது ஆட்சியில் இடம்பெற்ற முறைகேடுகளாலும் அதிகாரப் போக்காலும் காம்பிய மக்கள் கொதித்து எழுந்தனர். ஒருவாறு நவம்பரில் தேர்தல் நடைபெற்று அவர் படு தோல்வியடைந்தாலும் பதவி விலக மறுத்து விட்டார். எதிர்த்துப் போட்டியிட்ட அடமா பார்ரோ வெற்றியடைந்தார்.

பதவி விலக மறுத்த ஜம்மே இற்கு எதிராக மக்கள் போராட்டம் நடந்தது. இதனால் அடமா பர்ரோ செனகல் நாட்டிலுள்ள காம்பிய தூதரகத்தில் அதிபராகப் பதவியேற்றார். மேலும் பதற்ற நிலையைத் தவிர்க்க செனகல் உட்பட மேற்கு ஆப்பிரிக்கத் துருப்புக்கள் காம்பியாவுக்கு விரைந்தன.

நிலமை இப்படியிருக்கத் தற்போது யாஹியா ஜம்மே தனது மனைவியுடன் கினியாவுக்குச் சென்று விட்டதாகவும் இதனால் புதிய அதிபர் அடமா பர்ரோ விரைவில் தாயகமான காம்பியா திரும்புவார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

0 Responses to பதவி விலக மறுத்த கம்பிய முன்னால் அதிபர் நாட்டை விட்டு வெளியேறினார்

Post a Comment

Followers