Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த வருடம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா இரகசியமாகச் செயற்பட்டு ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிங்டன் தொடர்பான ஈ மெயில் சர்ச்சை தகவல்களை விக்கிலீக்ஸ் இணையத் தளத்துக்கு அளித்ததாகவும் இதனால் இறுதிக் கட்டத்தில் ஹிலாரி கிளிங்டன் பின்னடவை சந்தித்து தோற்க நேர்ந்ததுடன் டொனால் டிரம்ப் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ரஷ்யா காய் நகர்த்தி செயற்பட்டிருப்பதாக அமெரிக்க புலனாய்வு நிறுவனங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

இந்நிலையில் தேர்தல் பிரச்சார சமயத்திலேயே ரஷ்யாவுடனான கூட்டுறவை வலுப்படுத்துவேன் என்று தெரிவித்து வந்த டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை வெளியிட்ட தனது பல டுவீட்டுக்களில் முட்டாள்கள் அல்லது நேர்மையற்றவர்களே ரஷ்யாவுடனான அமெரிக்காவின் உறுதியான நல்லுறவை எதிர்ப்பர் எனக் கருத்துத் தெரிவித்துள்ளார். மேலும் டிரம்ப் டவர் என்ற தனது அலுவலகத்தில் இருந்து அவர் ஊடகங்களுக்கு அளித்த செவ்வியில் ரஷ்யாவுடன் நல்ல உறவைப் பேணுவது என்பது ஒரு நல்ல விடயம். தீயதல்ல! என்றும் எந்த ஒரு நாட்டுடனான உறவுக்கும் ஒன்றில்லா விட்டால் இன்னொன்று என நாம் போதுமான பிரச்சினைகளை சுமந்து கொண்டு தான் இருக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் வெளியிட்ட வகைப் படுத்தப் படாத அறிக்கையில் அமெரிக்க தேர்தலில் செல்வாக்கு செலுத்தி, ஹிலாரி கிளிங்டனுடனான போட்டியில் டிரம்ப் வெற்றி பெறுவதற்காக மிகத் தெளிவான திட்டத்துடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் தொழிற்பட்டார் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரச்சார சமயத்தில் டிரம்ப் புட்டினை ஒரு மிக உறுதியான மற்றும் தீர்க்கமான முடிவு எடுக்கக் கூடிய தலைவர் எனப் புகழ்ந்திருந்ததுடன் இரு நாடும் தமது நல்லுறவை வலுப்படுத்துவதன் மூலம் பல நண்மைகளைப் பெற முடியும் என்றும் தெரிவித்திருந்தார். முன்னதாக அதிபர் ஒபாமாவின் நிர்வாகத்தின் கீழ் ரஷ்யாவுடன் நல்லுறவை வலுப்படுத்த மேற்கொள்ளப் பட்ட முயற்சிகள் தோல்வியடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அதிபர் தேர்தலின் போக்கை மாற்ற ரஷ்யாவின் தலையீடு இருந்த போதும் இன்னமும் அமெரிக்க அரசியலிலோ அல்லது சட்டம் அமைக்கும் விடயத்திலோ குறுக்கிட ரஷ்யா இன்னமும் முயற்சி செய்யவில்லை என அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விக்கிலீக்ஸ் இணையத் தள தாபகர் ஜூலியன் அசாஞ்சே ஹிலாரி கிளிங்டனின் ஈ மெயில் விவகாரத்தில் ரஷ்யா தமக்கு தகவல் அளித்திருந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டை முற்றாக மறுத்துள்ளார்.

0 Responses to ரஷ்யாவுடனான உறுதியான அமெரிக்க நல்லுறவை முட்டாள்கள் மாத்திரமே எதிர்ப்பர்! : டொனால்ட் டிரம்ப்

Post a Comment

Followers