Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்னோவா சம்பத் என பழியுடன் கார் எதற்கு என்று காரை தலைமைக்கு கழகத்தில் நிறுத்தி விட்டேன் என்று நாஞ்சில் சம்பத் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கையில், 2012 டிசம்பர் 16ம் தேதி இயக்க பிரச்சாரத்திற்காக கழகத்தின் பொருளாளர் பெயரில் வாங்கப்பட்ட கார் என்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டது. அம்மா அவர்கள் சாவியை என்னிடத்தில் ஒப்படைத்தார்கள் அந்த காரை கட்சியின் பிரச்சாரத்தை தவிர என்னுடைய சொந்த உபயோகத்திற்காக ஒருநாள்கூட பயன்படுத்தவில்லை.

பிரச்சாரம் இல்லாத நாட்களில் என்னுடைய நண்பர் ஜாபர் அலி வீட்டில் பாதுகாப்பாக நிற்கும் , இப்போது 8 மாத காலமாக பிரச்சாரம் இல்லை, வீணாக  அதை வைத்து கொண்டு இன்னோவா சம்பத் என பழியும் சுமந்து கொண்டு எதற்கு இருக்க வேண்டும் என்று எண்ணி இன்று காலை தலைமை கழகத்தில் ஒப்படைத்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.

அதிமுக தலைமையுடன் ஒத்துப் போகாததால் அதிமுகவை விட்டும் விலகியதாக செய்தியாளர்கள் ஒருவர் தொடர்புக்கொண்டு கேட்டபோது கூறியுள்ளார். வேறு கட்சியில் இணையும் எண்ணம் உள்ளதா என்று கேட்டபோது, தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறியுள்ளார் நாஞ்சில் சம்பத்.

0 Responses to இன்னோவா சம்பத் என பழியுடன் கார் எதற்கு?: நாஞ்சில் சம்பத்

Post a Comment

Followers