Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடத்துவதுத் தொடர்பான அவசர சட்டத்தை எதிர்த்து யாரும் மனுத் தாக்கல் செய்தால் தங்களை கேட்காமல் உத்தரவு எதுவும் பிறப்பிக்ககூடாது என மனுவில் தமிழக அரசு குறிப்பிட்டு உள்ளது.

இதற்கிடையில், மதுரை அலங்காநல்லூரில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமது தலைமையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை துவக்கி வைக்க சென்றார். ஆனால், அங்குள்ள மக்கள், மற்றும் போட்டியாளர்கள்,காளைகளை வளர்ப்போர் இதற்கு அனுமதி தர மறுத்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு நடத்துவதுத் தொடர்பாக நிரந்தர சட்டம் இயற்றும் வரை ஜல்லிக்கட்டு நடத்த விடமாட்டோம் என்றும், அப்படி ஜல்லிக்கட்டு
நடக்கும்போது, இதில் அரசு பிரமுகர்கள் தலையிடக் கூடாது என்றும் அலங்காநல்லூர் மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால், முதல்வர் ஜல்லிக்கட்டு போட்டிகளைத் துவக்கி வைக்காமல் சென்னை திரும்புவார் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to ஜல்லிக்கட்டு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...