Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து மாவட்ட மற்றும் தொகுதி மட்டங்களில் குழுக்களை அமைக்கவுள்ளதாக கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

ஜனவரி முதல் எதிர்வரும் பெப்ரவரி மாத இறுதிக்குள் மாவட்டக் குழுக்கள் நியமிக்கப்பட உள்ளதுடன் தொகுதி வாரியான குழுக்களையும் நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டளஸ் அழகப்பெரும கூறியுள்ளதாவது, “கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகள் அடங்கியதாக இந்த குழுக்கள் நியமிக்கப்படும். புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உட்பட கூட்டு எதிர்க்கட்சியின் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்த குழுக்களில் உள்ளடக்கப்பட உள்ளனர். இதற்கு தேவையான அடிப்படை நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to மாவட்டக் குழுக்களை அமைக்க கூட்டு எதிரணி (மஹிந்த அணி) தீர்மானம்!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...