முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள காணி மீட்புப் போராட்டம், தீர்வு ஏதும் கிடைக்காத நிலையில் இன்று திங்கட்கிழமை 14வது நாளாக தொடர்கின்றது.
இரவில் அதிகளவான பனி, பகலில் அதிக வெயில் என காலநிலையின் தாக்கத்திற்கு மத்தியிலும் மக்கள் தமது சொந்த இடத்திற்கு வெல்வதில் உறுதியாக உள்ளனர். குடும்பம் குடும்பமாக வீதிக்கு வந்து போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். பிள்ளைகள் கல்வி நடவடிக்கைகளையும் போராட்டக்களத்திலேயே தொடர்கின்றனர்.
யுத்தம் முடிவுக்கு வந்து ஏழு வருடங்களை கடந்த போதும் தங்களின் சொந்த விவசாய நிலங்கள் இல்லாது இருப்பது தங்களின் பொருளாதாரத்தில் பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள காணி மீட்புப் போராட்டத்திற்கு வடக்கு மாகாண சபை ஆதரவு வழங்கியுள்ளது. ஆளுங்கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்களோடு இணைந்து கொண்டிருந்தனர்.
0 Responses to கேப்பாபுலவு காணி மீட்புப் போராட்டம் 14வது நாளாக தொடர்கிறது; வடக்கு மாகாண சபை ஆதரவு!