பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவின் துறைமுகப் பகுதிக்கு அண்மையில் உள்ள ஷாண்டி டவுனில் நேற்றிரவு முதல் இன்று புதன்கிழமை காலை வரை ஏற்பட்ட கடும் தீ விபத்தில் 15 000 பேர் இல்லங்களை இழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பரோலா கம்பவுண்டுக்கு உள்ளே 1000 வீடுகள் தீக்கிரையாகி உள்ளன. இந்த கம்பவுண்டின் இருபுறமும் குறுகிய இடப்பரப்பில் பல குடும்பத்தவர் தமது சிறிய வீடுகளைக் கொண்டிருந்தனர். செவ்வாய் இரவு வேகமாகத் தீ பரவிய போதும் இதனால் உயிரிழப்பு ஏற்படவில்லை. ஆனால் 7 பேருக்கு சிறிய தீக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரிக்கப் படவுள்ளதாகவும் தீயணைப்பு அதிகாரி எடில்பேர்ட்டோ க்ருஸ் தெரிவித்துள்ளார்.
சமூக நல ஆர்வலரான ரெஜினா ரானே மட்டா கருத்துத் தெரிவிக்கையில் வீடுகளை இழந்தவர்களுக்காக 3 தற்காலிக பாசறைகள் ஒழுங்கு செய்யப் பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் வீடுகளை இழந்த 3000 குடும்பங்களுக்கு உணவும் குடிநீரும் வழங்கப் பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஆயினும் பல பொது மக்கள் வீதிகளின் இரு மருங்கிலும் தமது ஆடைகள், பாவனைப் பொருட்கள் மாத்திரமன்றி சிலர் வாஷிங் மேஷின் மின் விசிறிகளுடன் கூடக் காத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

0 Responses to பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவின் ஷாண்டி டவுன் தீ விபத்தில் 15 000 குடிமக்கள் வீடுகளை இழந்துள்ளனர்