அதிமுக சட்டமன்றக்குழுத் தலைவரான எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்குமாறு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைத்துள்ளார். தமிழக ஆளுநருக்கும்- எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையில் சற்றுமுன்னர் (இன்று வியாழக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பை அடுத்தே, ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்துள்ளார்.
இதனையடுத்து, தமிழகத்தின் புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியும், அவரோடு அமைச்சரவையும் இன்று மாலை 05 மணிக்கு ஆளுநர் முன்னிலையில் பதவியேற்கவுள்ளார்.
இதனிடையே, அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள விரிசலை அடுத்து, ஆட்சியமைக்கவுள்ள எடப்பாடி பழனிச்சாமியை 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கவும் ஆளுநர் காலக்கெடு விதித்துள்ளார்.

0 Responses to எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு; 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க காலக்கெடு!