Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்னால் பிரெஞ்சு அதிபரான நிக்கொலஸ் சர்க்கோஷி 2012 தேர்தல் பிரச்சார சமயத்தில் சட்ட விரோதமாக அளவுக்கதிகமாக செலவு செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப் படவுள்ளார் என இன்று பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதாவது Bygmalion எனப்படும் பொதுமக்கள் சேவை அமைப்பின் தவறான ரசீதுகளைப் பயன்படுத்தி தேர்தல் பிரச்சார செலவு எல்லையான 22.5 மில்லியன் யூரோக்களுக்கும் அதிகமாக இவர் செலவு செய்துள்ளார் என்று குற்றம்  சுமத்தப் பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் இந்த விசாரணையில் இருந்து தப்பிக்க சர்க்கோஷி எடுத்த சட்ட ரீதியான முயற்சிகள் தோல்வியடைந்ததை அடுத்து பெப்ரவரி 3 ஆம் திகதி இந்த வழக்கில் தொடர்புடைய இரு நீதிபதிகளில் ஒருவரான சேர்கே டௌர்னாயிரே சர்க்கோஷி மீதான விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார். சர்க்கொஷியின் வலது சாரிக் கட்சிக்கு தேர்தல் பிரச்சார சமயத்தில் Bygmalion 18.5 மில்லியன் யூரோக்கள் செலவழித்ததாகத் தெரிய வருகின்றது.

இதற்கு முன்னதாக 1958 இல் தாபிக்கப் பட்ட பிரான்ஸின் 5 ஆவது குடியரசு தலைவரான ஜேக்குவெஸ் சிராக் என்பவர் மீது மட்டுமே 2011 ஆம் ஆண்டு தவறான வேலை வாய்ப்பு ஊழல் தொடர்பில் 2 வருட சிறைத் தண்டனை விதிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் செப்டம்பர் 2015 ஆம் ஆண்டே சர்க்கோஷி மீது போலிஸ் விசாரணை மேற்கொண்ட போதும் அவர் இந்த சர்ச்சையில் தனக்குத் தொடர்பில்லை என்றும் இதற்கான பொறுப்பை Bygmalion மற்றும் UMP ஆகியவையே ஏற்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

0 Responses to 2012 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்துக்கான சட்ட விரோத செலவு தொடர்பில் விசாரணை எதிர் நோக்குகின்றார் சர்க்கோஸி

Post a Comment

Followers