Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2020ஆம் ஆண்டளவில் நாட்டின் தலைமைத்துவத்தையும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தையும் அம்பாந்தோட்டைக்கு பெற்றுக்கொள்ள முடியுமாக இருக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை சூரியவெவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஆகியவற்றில் போட்டியிடாது அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்ளுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில், அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து 2020இல் விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையிலேயே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

0 Responses to நாட்டினதும், ஐ.தே.க.வினதும் தலைமைத்துவத்தை 2020ல் அம்பாந்தோட்டை ஏற்கும்: சஜித்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.