இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் ஆக்கிரமித்து வைத்துள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி வடக்கின் பல பகுதிகளிலும் பொதுமக்களினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கேப்பாபுலவ- பிலக்குடியிருப்பில் விமானப்படையின் அத்துமீறிய ஆக்கிரமிப்பிலுள்ள 42 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரி இன்று செவ்வாய்க்கிழமை 22வது நாளாக போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை, புதுக்குடியிருப்பில் 19 குடும்பங்களுக்குச் சொந்தமான 49 ஏக்கர் காணிகளிலிருந்து இராணுவத்தினரை உடன் வெளியேறுமாறு வலியுறுத்தி 03ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்களின் போராட்டம் 19வது நாளாக தொடர்கின்றது.
இதனிடையே, கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள தமது காணிகளை விடுவிக்குமாறுகோரி, பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்கு முன்பாக நேற்று திங்கட்கிழமை காலை பொதுமக்கள் தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

0 Responses to காணி மீட்புப் போராட்டம்; கேப்பாபுலவில் 22வது நாளாக, புதுக்குடியிருப்பில் 19வது நாளாக, பரவிப்பாஞ்சானில் 2வது நாளாக தொடர்கிறது!