Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முல்லைத்தீவு கேப்பாபுலவு- பிலவுக்குடியிருப்பில் விமானப்படையின் அத்துமீறிய ஆக்கிரமிப்பிலுள்ள தமது 42 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரி பொதுமக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை 27வது நாளாக தொடர்ந்து வருகின்றது.

இந்தநிலையில், கேப்பாபுலவு மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தியும் வலிகாமம் வடக்கு மக்களினால் மல்லாகத்தில் தற்போது (காலை 10.00 மணியளவில்) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனிடையே, முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பிலும் 19 குடும்பங்களுக்குச் சொந்தமான 49 ஏக்கர் காணிகளிலிருந்து இராணுவத்தினரை உடன் வெளியேறுமாறு வலியுறுத்தி 03ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்களின் போராட்டம் 24வது நாளாக தொடர்கின்றது.

0 Responses to கேப்பாபுலவு காணி மீட்புப் போராட்டம் 27வது நாளாக தொடர்கிறது; ஆதரவு தெரிவித்து மல்லாகத்திலும் ஆர்ப்பாட்டம்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.

அதிகமாக வாசிக்கபட்டவை...