Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நியூசிலாந்தின் தெற்குத் தீவில் உள்ள கோல்டன் பே என்ற புகழ் பெற்ற கடற்கரையில் கிட்டத்தட்ட 400 திமிங்கிலங்கள் அதிரடியாகக் கரை ஒதுங்கியுள்ளதுடன் இவற்றில் 300 திமிங்கிலங்கள் பலியாகி உள்ளன.

உயிருடன் உள்ள திமிங்கிலங்களை கடலுக்குத் திருப்பி அனுப்பும் பணியில் தன்னார்வலர்களும் அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்களும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் கடலுக்கு அனுப்பப் பட்ட திமிங்கிலங்கள் திரும்பவும் கரை  ஒதுங்குகின்றன. Mass stranding என்ற இந்த நிகழ்வு நியூசிலாந்து வரலாற்றில் 3 ஆவது மிகப்பெரிய நிகழ்வாகும்.

இவ்வாறு திமிங்கிலங்கள் கரை ஒதுங்கி உயிர் விட முக்கியமான சில காரணங்கள் கூறப்படுகின்றன. வயதான திமிங்கிலங்கள் தமது இறுதிக் காலத்தில் அதிக உடல் எடையுடன் நீந்த முடியாத சிரமத்தால் கரை ஒதுங்குகின்றன. இதைவிட தொற்று நோய் வாய்ப்பட்ட திமிங்கிலங்கள் கூட்டமாகக் கரை ஒதுங்குவதும் உண்டு. திமிங்கிலங்கள் வாழும் பகுதியில் அதிகளவு மீன்கள் வேட்டையாடப் பட்டு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டால் அப்போதும் திமிங்கிலங்கள் கரை ஒதுங்குவது உண்டு.

கடலில் பருவ மாற்றம் காரணமாகக் கரை ஒதுங்கும் திமிங்கிலங்கள் அனுப்பும் சிக்னல்களை அடிப்படையாகக் கொண்டு ஏனைய திமிங்கிலங்களும் கூட்டமாகக் கரை ஒதுங்குவது மிக முக்கிய காரணமாகக் கூறப்படுகின்றது.

0 Responses to நியூசிலாந்து கடற்கரயில் வரலாற்றில் 3 ஆவது மிகப்பெரிய திமிங்கிலங்கள் கரை ஒதுங்கும் நிகழ்வு : 300 திமிங்கிலங்கல் வரை பலி

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...