Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாகிஸ்தானின் லாஹூர் பகுதியில் அண்மையில் போலிசாரைக் குறி வைத்து நிகழ்த்தப் பட்டிருந்த தீவிரவாதத் தாக்குதலில் 6 பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட 13 பேர் கொல்லப் பட்டும் 70 பேர் வரை படுகாயம் அடைந்தும் இருந்தனர்.

இந்நிலையில் இத்தாக்குதலுடன் தொடர்புடைய 30 பேரை இன்று செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் போலிஸ் கைது செய்துள்ளதுடன் தீவிரவாதிகள் என அடையாளம் காணப்படாத 4 பேர் மீது FIR உம் பதிவு செய்துள்ளது. தலிபான்களால் பொறுப்பேற்றுக் கொள்ளப் பட்டிருந்த இந்தத் தற்கொலைத் தாக்குதலுக்கு மூளையாகச் செயற்பட்டவனை விரைவில் கண்டு பிடிப்போம் என பஞ்சாப் அரச பேச்சாளர் ஷாயேம் உஸ்ஸைன் கட்ரி செய்தியாளர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

லாஹூர் தாக்குதலில் கொல்லப் பட்ட 6 அதிகாரிகளில் லாஹூர் டிராஃபிக் போலிஸ் கேப்டன் அஹ்மெட் மொபீன் மற்றும் மூத்த சுப்ரீண்டண்ட் போலிஸ் ஷஹீட் கொண்டால் ஆகியோரும் அடங்குவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. கடந்த வருடம் மார்ச் 27 ஆம் திகதி லாஹூரில் ஈஸ்டர் பண்டிகையின் போது இதே போன்று தெஹ்ரிக் ஈ தலிபான் போராளிகள் நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பெரும்பாலான கிறித்தவர்கள் உட்பட 75 பேர் கொல்லப் பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொல்லப் பட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் மரணச்சடங்கு இன்று செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப் படுவதுடன் துக்க தினமும் அனுசரிக்கப் படுகின்றது. தற்போது இக்குண்டுத் தாக்குதல் தொடர்பில் போலிஸ் அதிகாரிகள் மற்றும் புலனாய்வுத் துறையினர் இணைந்து தீவிர விசாரணையை மேற் கொண்டு வருகின்றனர்.

0 Responses to லாஹூர் தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடைய 30 பேரை பாகிஸ்தான் போலிஸ் கைது செய்தது

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...