Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகத்தில் உள்ள 33 கோயில் யானைகளுக்கு இன்று முதல் 30 நாட்களுக்கு கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டியில் புத்துணர்வு முகாம் நடக்கிறது. 

இதற்காக நேற்று முன்தினம் இரவு அந்தந்த கோயில்களில் இருந்து முகாமிற்கு யானைகள் புறப்பட்டன. நேற்று காலை முதலாவதாக திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி தேக்கம்பட்டி வந்தடைந்தது. யானைக்கு அதிகாரிகள் மாலை அணிவித்து பழம் கொடுத்து வரவேற்றனர். திருநெல்வேலி சங்கரன் கோயில் கோமதி இரண்டாவதாக வந்தது. தொடர்ந்து யானைகள் ஒன்றன் பின் ஒன்றாக வரத்துவங்கியது. அதன்படி, நேற்று இரவு வரை 30 யானைகள் வந்தடைந்தன. மேலும் 2 யானைகள் இன்று காலையும். வில்லிப்புத்தூர் யானை நாளையும் வந்து சேர்கின்றன.

நேற்று வந்த யானைகள் அனைத்தும் மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோயில் கொடிமரம் அருகே அழைத்து செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. நீண்ட தொலைவில் இருந்து யானைகள் வந்ததால் ஒருவித களைப்புடன் காணப்பட்டன. தொடர்ந்து யானைகள் தண்ணீர் குழாய்க்கு சென்று தண்ணீர் குடித்து தாகத்தை தீர்த்து கொண்டன.

அறநிலையத்துறை இணைஆணையர் இளம்பரிதி, மாவட்ட வன அலுவலர் ராமசுப்பிரமணியம் ஆகியோர் முகாமில் பாதுகாப்பு பணி குறித்து ஆய்வு செய்தனர். 30 நாள் நடக்கும் இந்த முகாமில் யானைகளுக்கு காலை மற்றும் மாலை என இரண்டு நேரம் மூலிகை கலந்த உணவு வழங்கப்படும். புத்துணர்வு முகாம் இன்று காலை 9 மணிக்கு துவங்குகிறது. நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பங்கேற்க மாட்டார்கள் என தெரிகிறது. இதனால், அரசு அதிகாரிகள் முகாமை துவக்கி வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுது.

0 Responses to தமிழகத்தில் உள்ள 33 கோயில் யானைகளுக்கு இன்று முதல் 30 நாட்களுக்கு புத்துணர்வு முகாம்!

Post a Comment

Followers