வன்னியில் பன்றிக் காய்ச்சல் நோய் அபாயமுள்ளதாகவும், இதுவரை மூன்று சிறுவர்கள் நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் கிளிநொச்சி சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் வட்டகச்சி சம்புக்குளம், முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு றெட்பானா மற்றும் மாங்குளம் பிரதேசத்தில் பெரியகுளம் ஆகிய இடங்களைச் சேர்ந்த மூன்று சிறுவா்களுக்கு பன்றிக் காய்ச்சல் நோய் அடையாளம் காணப்பட்டுள்ளது.
எனவே, பின்வரும் நோய் அறிகுறிகள் காணப்படும் நிலையில், உடனடியாக அரச வைத்தியசாலையை நாடி உரிய பரிசோதனை மற்றும் சிகிசை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வைரசுக் காய்ச்சல் என்பது புதியநோய் அல்ல. காலத்துக் காலம் இவ்வாறான இன்ப்ளுவன்சா வைரஸ் காய்ச்சல் பரவுவதுண்டு. பன்றிகளில் உருவான இன்புளுவன்சா வைரஸ் ஆனது 2009ஆம் ஆண்டு மனிதனுக்கு பரவியிருந்தமை, மெக்சிகோவில் கண்டுபிடிக்கப்பட்டது. சில வேளைகளில் தாக்குதிறன் கூடியவைரஸ் வகைகள் தொற்றும்போதுகடுமையான விளைவுகள் மனிதருக்கு ஏற்படும்.

0 Responses to வன்னியில் பன்றிக் காய்ச்சல் அபாயம்; இதுவரை 3 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டனர்!