Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சசிகலாவை விரும்பாத 40 எம்.எல்.ஏ.,க்களால் அ.தி.மு.க., உடையும், இவர்கள் தனி அணியாக செயல்பட்டு தி.மு.க.,வுக்கு ஆதரவு தர முடிவு செய்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

முதல்வராக சசிகலாவை விரும்பாத, 40 அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபையில் தனி அணியாக செயல்பட்டு, திமு.க.,வுக்கு ஆதரவு தர முடிவு செய்துள்ளனர். 'இந்த வாய்ப்பை சாதகமாக்கி, நிலையான ஆட்சியை அமைக்க, ஆளுநரிடம் அனுமதி கேட்க தயாராவோம்' என, தி.மு.க., மாவட்ட செயலர்களுக்கு, அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தி.மு.க., தலைமை திட்டப்படி, மாவட்ட வாரியாக, எம்.எல்.ஏக்களை இழுக்கும் பொறுப்பு, முக்கிய நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்கு, சாத்துார் ராமச்சந்திரன்; வட மாவட்டங்களுக்கு, எ.வ. வேலு; மேற்கு மாவட்டங்களுக்கு, பொங்கலுார் பழனிசாமி, முத்துசாமி, என்.கே.கே.பெரியசாமி, என்.கே.கே.பி.ராஜா;சென்னை மாவட்டங் களுக்கு, மா.சுப்பிரமணியன்; டெல்டா மாவட் டங்களுக்கு, நேரு, டி.ஆர்.பாலுபோன்றோருக்கு, இந்த பொறுப்பு தரப்பட்டுள்ளது.

கட்சியின் சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வானதும், அ.தி.மு.க., -
எம்.எல்.ஏ.,க்கள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். அவர்களிடம், தி.மு.க.,
துாதர்கள் நடத்திய பேச்சில், 38 பேர், வெளியில் இருந்து தி.மு.க.,வுக்கு
ஆதரவு தரமுன் வந்துள்ளனர்.

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களை வளைத்தால் மட்டும் போதாது, மத்திய அரசின்
முழு ஆதரவும் தேவை என்பதை, தி.மு.க., நன்கு உணர்ந்துள்ளது. இதையடுத்து, மும்பையைச் சேர்ந்த, பா.ஜ., தலைவர் ஒருவரிடம், மத்திய அரசிடம், 'கிரீன் சிக்னல்' பெற்றுத் தர வேண்டும் என, தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர், ரகசிய பேச்சு நடத்தி முடித்துள்ளார்.

ஆளுங்கட்சியை உடைக்கும் வேலை வெற்றி கரமாக முடிந்தால், மத்திய அரசு ஆதரவுடன், தி.மு.க., ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது. தனித்து ஆட்சி
அமைக்க, 118 எம்.எல்.ஏ.,க்கள் தேவை.

அதில், தற்போது, தி.மு.க.,விடம், 89 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். கூட்டணி
கட்சி யான, காங்கிரஸ் கட்சியில், எட்டு எம்.எல்.ஏ.,க் கள், இந்திய
யூனியன் முஸ்லிம் லீக் கட்சியி டம், ஒரு எம்.எல்.ஏ.,வும், உள்ளனர்.

எனவே, ஆட்சி அமைக்க இன்னும், 20 பேர் மட் டும் தேவை. அதை, எளிதாக பெற்று விடலாம் என்று, தி.மு.க., கணக்கு போட்டு, களத்தில் குதித்துள்ளது,
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 Responses to சசிகலாவை விரும்பாத 40 எம்.எல்.ஏ.,க்களால் அ.தி.மு.க., உடையும்?

Post a Comment

Followers