Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடந்து வரும் சிரியாவில் இதுவரை 13 000 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்டிருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபையான AMNESTY Internationals முன் வைத்துள்ள குற்றச்சாட்டை சிரிய அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது.

மேலும் இக்குற்றச்சாட்டு சிரிய அரசுக்குக் களங்கம் ஏற்படுத்தி விட்டது என்றும் சிரியா பதிலடி கொடுத்துள்ளது. அம்னெஸ்டியின் அறிக்கையில் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்துக்கு எதிரானவர்கள் அனைவரும் இரக்கமின்றி கொல்லப் பட்டு வருவதாகவும் இவர்களது மரண தண்டனை இரகசியமாக நிறைவேற்றப் பட்டு வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுவரை பல்லாயிரக் கணக்கானவர்கள் சித்திரவதைக்கு உள்ளாகி வருவதாகவும் அம்னெஸ்டி தெரிவித்துள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபையின் இந்த அறிக்கை சிரிய அரச தரப்பு அதிகாரிகள் மற்றும், இராணுவத்தினர் மற்றும் நீதித்துறையிடம் இருந்து பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

0 Responses to கடந்த 5 வருடங்களில் 13 000 பேருக்கு மரண தண்டனை? : அம்னெஸ்டி அறிக்கையை மறுக்கும் சிரியா

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...