இன்று ஞாயிற்றுக்கிழமை கிறீக்கின் 2 ஆவது மிகப் பெரிய நகரான தெஸ்ஸாலொனிக்கியில் 2 ஆம் உலக மகா யுத்தத்தின் போது இடப்பட்ட 250 Kg எடையுடைய செயல் நிலையில் இருந்த வெடிகுண்டு ஒன்றை வெற்றிகரமாக கிறீக் துருப்புக்கள் செயலிழக்கச் செய்துள்ளனர். இந்த நடவடிக்கையின் போது அப்பகுதியில் இருந்த சுமார் 70 000 மக்கள் தற்காலிகமாக வெளியேற்றப் பட்டனர்.
வடக்கு துறைமுக நகரான தெஸ்ஸாலொனிக்கியில் கடந்த வாரம் பாதை திருத்தும் பணியில் சிலர் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பெட்ரோல் நிரப்பும் நிலையம் ஒன்றுக்கு அருகே பூமிக்கு அடியில் இந்த வெடிகுண்டு கண்டு பிடிக்கப் பட்டிருந்தது. மேலும் இந்த வெடிகுண்டு வெற்றிகரமாக அகற்றப் பட்டதாகவும் அருகே இருந்த இராணுவ ஃபைரிங் எல்லைக்குக் கொண்டு செல்லப் பட்டதகவும் பிராந்திய பாதுகாப்புத் தலைமை அதிகாரியான அப்போஸ்டொலொஸ் ட்ஷிட்ஷிக்கொஸ்டஸ் என்பவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையின் போது 1.9 Km ஆரையில் இருந்த 70 000 பொது மக்கள் தற்காலிகமாக அகற்றப் பட்டதுடன் இதனால் சில தொழில் துறை நிறுவனங்களின் வருவாயும் பாதிக்கப் பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கிறீக்கில் இந்தளவு சனத்தொகை உள்ள ஒரு இடத்தில் இவ்வளவு பெரிய வெடிகுண்டு ஒன்று கண்டு பிடிக்கப் பட்டதே இல்லை என ட்ஷிட்ஷிக்கொஸ்டஸ் தெரிவித்துள்ளார். சில வீடுகளில் இருந்த பொது மக்கள் திருட்டுப் போகும் என்ற பயம் காரணமாக குறித்த பகுதியில் இருந்து வெளியேற கடும் தயக்கம் காட்டியதாகவும் தெரிய வருகின்றது. பொது மக்களை வெளியேற்ற பல பஸ் வண்டிகள் வரவழைக்கப் பட்ட போதும் பெரும்பாலான பொது மக்கள் சுயமாகவே வெளியேறியுள்ளனர். அருகே இருந்த அகதிகள் முகாம் ஒன்றில் இருந்து 400 அகதிகள் கூட பாதுகாப்பான பகுதிகளுக்கு பஸ் வண்டியில் அழைத்துச் செல்லப் பட்டுள்ளனர்.
இந்த வெடிகுண்டு 1943 ஆம் ஆண்டு குறித்த நகரின் ரயில் நிலையம் மற்றும் துறைமுகத்தைத் தாக்குவதற்காக பிரிட்டன் விமானங்களால் வான் தாக்குதல் நிகழ்த்தப் பட்ட போது போடப் பட்டது என அடையாளம் காணப் பட்டுள்ளது. 2 ஆம் உலக யுத்தம் முடிந்து 7 தசாப்தங்கள் ஆகியுள்ள போதும் இன்றும் உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் அவ்வப்போது இந்த யுத்த சமயத்தில் போடப் பட்டு இன்னமும் வெடிக்காத நிலையில் குண்டுகள் கண்டு பிடிக்கப் பட்டு அகற்றப் பட்டு வருகின்றன. இப்பணியின் போது பொது மக்களும் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

0 Responses to 70 000 மக்களை வெளியேற்றி 2 ஆம் உலக யுத்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்தது கிறீக் துருப்புக்கள்