சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்து வந்த பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நேற்று ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்தார். மரியாதை நிமித்தமாகதான் சுப்பிரமணியன் சுவாமி கவர்னரை சந்தித்ததாக கவர்னர் மாளிகையில் இருந்து தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கவர்னர் சந்திப்பிற்கு பிறகு அவரது வீட்டில் இருந்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிக்கு சுப்பிரமணியன் சுவாமி பேட்டியளித்தார். அந்த பேட்டியில் குறிப்பிட்ப்பட்டுள்ளதாவது: ‛ தமிழக அரசியலில் அசாதாரண சூழ்நலை நிலவினாலும் சசிகலாவிற்கே பெரும்பான்மை உள்ளது. எனவே உடனடியாக சசிகலாவை ஆட்சியமைக்க கவர்னர் அழைக்க வேண்டும். வழக்கு நிலுவையில் உள்ளதை கருத்தில் கொள்ள வேண்டியதில்லை.
கவர்னர் சட்டப்படியே நடந்துகொள்ளவேண்டும். மக்களுக்கு சசிகலாவை பிடிக்கவில்லை என்றால் இடைத்தேர்தலில் அவரை தோற்கடிக்கட்டும். தற்போது அவர் பெரும்பான்மையை நிருபிக்க வாய்ப்புத்தர வேண்டும்.
ஒரு முதலமைச்சராக இருந்த பன்னீர்செல்வம் தன்னை கட்டாயப்படுத்தி ராஜினிமா செய்ய வைத்தனர் என்கிறார். இதை கூற அவருக்கே வெட்கமாக இல்லையா, இப்படி கூறுவது, தன்னையே அவர் அவமானப்படுத்திக்கொள்வதற்கு சமம் என்றார்

0 Responses to மக்களுக்கு சசிகலாவை பிடிக்கவில்லை என்றால் அவரை இடைத்தேர்தலில் தோற்கடிக்கட்டும்: சு. சாமி