Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணையின் போது சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு அவசியம் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அவுஸ்திரேலியாவிற்கான பணிப்பாளர் எலைன் பியர்சன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தின் தேசியக் கூறுகளை நோக்கிய முன்னேற்றத்தை எட்டியுள்ளது. எனினும், நீதி வழங்கும் செயற்பாடுகளில் சர்வதேச பங்களிப்பை உள்ளடக்கும் விடயத்தில் முன்னேற்றம் ஏற்படாமை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் கவலைகொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எலைன் பியர்சன் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக்கொண்டுள்ள போதிலும், சர்வதேச பங்களிப்பை உள்வாங்குவதில் முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை.

சர்வதேச பங்களிப்பை பிற்போடுவது அல்லது கைவிடுவது இலங்கையின் உள்நாட்டு போரின்போது வெளிநாடுகளுக்குத் தப்பிச்சென்றவர்கள் மீள வருவதைத் தடுக்கலாம். தமிழ் மக்களுக்கு எதிரான அநீதிகளில் ஈடுபட்டவர்கள் இலங்கையில் சுதந்திரமாக நடமாடும்போது வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்கள் ஏன் இலங்கை திரும்ப எண்ண வேண்டும் என்பது யதார்த்தம்.

இலங்கை அரசாங்கம் மிக மோசமான பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும், சித்திரவதை காரணமாக வாக்குமூலம் அளித்த பலர் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இலங்கை அரசாங்கம் இன்னமும் பயங்கரவாத தடைச்சட்டத்தை அகற்றவில்லை. இலங்கையில் நீதி விசாரணைகள் சுதந்திரமாகவும், பக்கச்சார்பற்றதாகவும், காணப்படுவதற்கு அவுஸ்திரேலியா தனது நீதிபதிகளை வழங்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to போர்க்குற்ற விசாரணைகளின் போது சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு அவசியம்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.