முல்லைத்தீவு கேப்பாபுலவு- பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதி மக்களின் காணி மீட்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வடக்கு மாகாண பாடசாலை மாணவர்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று திங்கட்கிழமை காலை 07.30- 08.30 மணி வரையிலான காலப்பகுதியிலேயே மாணவர்கள் வீதிகளில் இறங்கி மனிதச் சங்கிலி வடிலில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேப்பாபுலவ- பிலக்குடியிருப்பில் விமானப்படையின் அத்துமீறிய ஆக்கிரமிப்பிலுள்ள 42 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரி இன்று திங்கட்கிழமை 21வது நாளாக போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
அதேவேளை, புதுக்குடியிருப்பில் 19 குடும்பங்களுக்குச் சொந்தமான 49 ஏக்கர் காணிகளிலிருந்து இராணுவத்தினரை உடன் வெளியேறுமாறு வலியுறுத்தி 03ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்களின் போராட்டம் 18வது நாளாக தொடர்கின்றது.

0 Responses to கேப்பாபுலவு காணி மீட்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பள்ளி மாணவர்களும் போராட்டம்!