Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள காணி மீட்புப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை எட்டாவது நாளாக தொடர்கின்றது.

இந்த நிலையில், இன்று மாலை 06.00 மணிக்குள் தமக்கு தீர்வு வழங்கப்படாது விட்டால், போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லப்போவதாக அறிவித்துள்ளனர்.

84 குடும்பங்களின் 40 ஏக்கருக்கும் அதிகமான காணிகளை விமானப்படையினர் பிடித்து வைத்துள்ளனர். அந்தக் காணிகளை விடுவிக்கப் போரியே கேப்பாபுலவு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தமக்கு இன்றைக்குள் தீர்வு வழங்கப்படாவிட்டால், தம்மை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு போராட்டத்தை கொண்டு செல்லப் போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

0 Responses to கேப்பாபுலவு மக்கள் இன்று மாலை வரை கால அவகாசம்; தீர்வு இல்லையேல் போராட்டம் அடுத்த கட்டத்துக்கு!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...