Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சென்னை கடலில் மிதக்கும் எண்ணெய் படலத்தை அகற்றுவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்பம் கைகொடுக்காததால் அதிகாரிகள் திணறி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை எண்ணூர் அருகே கடலில் மிதக்கும் எண்ணெய் படலத்தை அகற்ற மேலும் 10 நாட்கள் ஆகுமென மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ள நிலையில் 1 மாதம் ஆனாலும் அகற்ற முடியாது என்ற மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

எண்ணூரில் தொடங்கி திருவான்மியூர் வரையிலான கடற்பரப்பில் படர்ந்துள்ள எண்ணெய் படலத்தால் இப்பகுதியில் கடல்நீர் நீல நிரமாக காட்சியளிக்கிறது. துறைமுக ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டும் எண்ணெய் படலத்தை அகற்றும் பணி பின்னடைவையே சந்தித்துள்ளது.

0 Responses to சென்னை கடலில் மிதக்கும் எண்ணெய் படலத்தை அகற்றுவதில் பின்னடைவு!

Post a Comment

Followers