Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கிற மோசடித் தலைமைக்கு எதிராக அழுத்தத்தை மாத்திரம் கொடுப்பதில் பயனில்லை. மாற்றுத் தலைமையொன்றை உருவாக்குவதன் மூலமே வெற்றிபெற முடியும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தற்போது (இன்று செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளதாவது, “கொள்கை ரீதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எப்.பும், பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமை வகிக்கும் புளோட்டும் தமிழ் மக்கள் பேரவையில் இணைந்து செயற்படுகின்றன. அங்கு நாமும் கொள்கை ரீதியாக இணக்கத்துடன் இருக்கின்றோம். ஆனால், தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சி அல்ல. ஆகவே, புதிய தலைமையொன்றை உருவாக்க வேண்டிய தருணத்தில் அவர்கள் இணைந்து செயற்பட முன்வர வேண்டும். அதுவே, மோசடி செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரியான மாற்றாகவும் இருக்கும்” என்றுள்ளார்.

0 Responses to சுரேஷூம், சித்தார்த்தனும் மாற்றுத் தலைமையை உருவாக்க முன்வர வேண்டும்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Post a Comment

Followers