Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வி.கே.சசிகலா பெங்களூரு நீதிமன்றத்தில் சரண் அடையும் முன்னர் ஜெயலலிதா சமாதியில் உள்ளங்கையை அடித்து சத்தியம் செய்து சபதம் செய்தார். வி.கே.சசிகலா பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று சரண் அடைய செல்கிறார். முன்னதாக போயஸ் கார்டன் இல்லத்தில் உள்ள ஜெயலலிதா படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் காரில் புறப்பட்ட அவர், சென்னை மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் சமாதியில் தமது உள்ளங்கையால் அடித்து சத்தியம் செய்து சபதம்
மேற்கொண்டார். சபதம் குறித்து எதுவும் தெரிவிக்கவுமில்லை, செய்தியாளர்களை சந்திக்கவும் இல்லை. புறப்பட்டு, சென்றுவிட்டார் பெங்களூரு நீதிமன்றத்தை நோக்கி.

0 Responses to ஜெயலலிதா நினைவிடத்தில் சத்தியம் செய்து சபதம் எடுத்தார் சசிகலா

Post a Comment

Followers