Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை எனும் பெயரில் இடம்பெறும் பாலியல் இம்சைகள், அச்சுறுத்தல், பீதியை ஏற்படுத்துதல் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் முறையிடுவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்தியிருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதன் தலைமை அதிகாரியாக சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் திருமதி உமா குமாரசுவாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு கிடைக்கப்பெறும் அனைத்து முறைப்பாடுகளும் விசாரிக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளும் வழங்கப்படும்.

இணையத்தளத்தின் ஊடாக முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும். இதற்கு மேலதிகாக 0112-123-700 அல்லது 0112-123-456 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும்.

இது தொடர்பாக மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் தெளிவுபடுத்தப்படும். இவற்றுடன் தொடர்புபட்ட குற்றமிழைத்தவர்கள் பல்கலைக்கழக கல்வியை இழப்பதுடன் மாத்திரமன்றி சிறைக்கு செல்ல வேண்டி ஏற்படும்.

0 Responses to பகிடிவதையை தடுப்பதற்கு புதிய பொறிமுறை அறிமுகம்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.