Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அதிமுகவில் மொத்தம் 134 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர். இதில் 35 பேர் ஆதரவு ஓபிஎஸ்க்கு இருப்பதாக கூறப்படுகிறது. சிலர் 22 பேர் ஆதரவு தெரிவிப்பதாக கூறுகின்றனர்.

இந்த தருணத்தில் முதல்வர் பன்னீர் செல்வம் தனது ராஜினாமா முடிவை வாபஸ் பெற்று முதல்வராக தொடர நினைத்தால் தமிழக ஆளுநர் ஓ பி எஸ் அவர்களை சட்டசபையை கூட்டி சபையில் தனக்கு உள்ள பெரும்பாண்மையை நிரூபிக்க கோருவார். அவ்வாறு சட்டசபையை கூட்டும் போது திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் 99 பேர் ஓபிஎஸ்க்கு தார்மீக ரீதியில் தங்கள் ஆதரவை தெரிவிக்க அதிக வாய்ப்புள்ளது.

எனவே ஓபிஎஸ் மீதான நம்பிக்கை தீர்மாண வாக்கெடுப்பில் திமுக , காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள். ஓபிஎஸ்க்கு ஆதரவு அளிக்கும் மனநிலையிலேயே அவர்கள் உள்ளனர். அதிமுகவில் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் குறைந்த பட்சம் 19 பேர் ஆதரவு தெரிவித்தால் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 118 ஆக உயரும். அதிமுகவில் ஓபிஎஸ்க்கு ஆதரவு எம்எல்ஏக்கள் உள்ளனர்.

இந்த நிலையில் சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் கொண்டுவரப்படும்.
அப்போது மொத்த உறுப்பினர்களான 234ல் சரிபாதிக்கு மேல் உறுப்பினர்களின்
ஆதரவை , நம்பிக்கையை பெற்று நம்பிக்கை தீர்மானம் ஓபிஎஸ் க்கு சாதகமாக நிறைவேறும். அதன்மூலம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பன்னீர் செல்வம் அவர்கள் தமிழ் நாட்டின் முதலமைச்சராக தொடர்வார்.

அரசியல்சாசனப்படியான இந்த நடைமுறைக்கு தேவையான கால அவகாசத்தை தமிழக ஆளுநர் மாண்புமிகு முதலமைச்சருக்கு வழங்குவார்.

0 Responses to திமுக ஆதரவுடன் மாண்புமிகு முதல்வர் பன்னீர் செல்வம் அவர்கள் முதல்வராக தொடர வாய்ப்பு

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.