தென்னிலங்கையில் போராட்டங்களை நடத்த முடியுமாயின், வடக்கு- கிழக்கிலும் போராட்டங்களை நடத்த முடியும். அதனை அரசாங்கம் ஒருபோதும் எதிர்க்காது என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
எழுக தமிழ் பேரணியை அரசாங்கம் எதிர்க்கவில்லை. அந்தப் போராட்டத்தினை நடத்துவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதன் மூலம் நாட்டில் எவ்வாறான சுதந்திரம் காணப்படுகின்றது என்பதை மற்றவர்கள் உணர்ந்து கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு எதிரணி கொழும்பில் போராட்டங்களை நடத்துகின்றது. அப்படியான நிலையில் வடக்கிலுள்ளவர்களும் போராட்டங்களை நடத்த முடியும். அது தொடர்பில் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

0 Responses to எழுக தமிழை எதிர்க்கவில்லை; தெற்கில் போராட்டங்களை நடத்த முடியுமாயின் வடக்கிலும் நடத்தலாம்: லக்ஷ்மன் கிரியெல்ல