Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முல்லைத்தீவு கேப்பாபுலவு- பிலவுக்குடியிருப்பில் விமானப்படை ஆக்கிரமித்துள்ள பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு தீர்மானமொன்று வந்துள்ளதாக கூறப்படுகின்றது. ஆயினும், அது சாத்தியப்படாமல் போனால், காணி உரிமையாளர்களுக்கு நஷ்டஈடினை வழங்கிக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கேப்பாபுலவு- பிலவுக்குடியிருப்பில் 54 குடும்பங்களுக்கு சொந்தமான 40 ஏக்கருக்கும் அதிகமான காணியை விமானப்படை அபகரித்து முகாம் அமைத்துள்ளது. குறித்த காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக, அரசாங்கம் ஏற்கனவே பலதடவைகள் வாக்குறுதி வழங்கியிருந்த போதிலும், இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.

இந்த நிலையில், கேப்பாபுலவு மக்கள் இன்று வெள்ளிக்கிழமை 25வது நாளாக காணி மீட்புப் போராட்டத்தினை தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையிலேயே பாதுகாப்பு அமைச்சின் இரு வேறு நிலைப்பாடுகள் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

0 Responses to கேப்பாபுலவில் விமானப்படை ஆக்கிரமித்துள்ள காணிகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு இருவேறு நிலைப்பாடுகள்(?)

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.

அதிகமாக வாசிக்கபட்டவை...