Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தகவல் அறியும் உரிமைச் சட்டம் காணாமற்போனோரை கண்டுபிடித்து தருமாறு வலியுறுத்துவதற்கான ஒன்றல்ல என்று தேசிய ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சட்டத்தரணி ஜகத் லியனாராச்சி தெரிவித்துள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான ஒன்றே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பில் வளவாளர்களுக்கு தெளிவுபடுத்தும் செயலமர்வில் இந்த விடயத்தை சட்டத்தரணி ஜகத் லியனாராச்சி தெரிவித்துள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் பெரும் எண்ணிக்கையிலானோர் காணாமற்போன தமது உறவுகளை கண்டுபிடித்து தருமாறு விண்ணப்பங்களை சமர்ப்பித்திருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரங்க கலான்சூரிய குறிப்பிட்டிருந்தார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் காணாமற்போனோரை கண்டுபிடித்து தருமாறு கோரமுடியாது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்ன என்பதை பொதுமக்கள் சரியாக புரிந்துகொள்ள வேண்டும். ஒருவர் காணாமற்போயிருந்தால் அவர் எந்த பொலிஸ் நிலையத்தினால் அல்லது பாதுகாப்பு பிரிவினரால் அவர் அழைத்து செல்லப்பட்டார் என்பது தொடர்பான தகவல்களையே இந்த சட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

காணாமற்போனோரை கண்டுபிடிப்பதற்கு இதன் மூலம் முடியாது. பதிவுகள் தொடர்பான தகவல்களையே பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஜனநாயத்தை வலுப்படுத்துவதற்கே தகவல் அறியும் உரிமைந் சட்டம் பெரிதும் உதவும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to தகவல் அறியும் உரிமைச் சட்டம் காணாமற்போனோரை கண்டுபிடிப்பதற்கானது அல்ல: தேசிய ஊடக நிலையம்

Post a Comment

Followers